மக்களே ரெடியாகிக்கோங்க.. வந்தாச்சு பிஎஸ்என்எல் 5G சிம் கார்டு - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?மக்களே ரெடியாகிக்கோங்க.. வந்தாச்சு பிஎஸ்என்எல் 5G சிம் கார்டு - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

Breaking News: மக்களே ரெடியாகிக்கோங்க.. வந்தாச்சு பிஎஸ்என்எல் 5G சிம் கார்டு: இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருவது தான் பிஎஸ்என்எல் நிறுவனம். கடந்த சில வருடங்களாக முடங்கி கிடந்த இந்நிறுவனம் தற்போது மீண்டும் எழுச்சி அடைந்துள்ளது.

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் போல் விளங்கி வந்த ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இதனை தொடர்ந்து பெரும்பாலான மக்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் சேர்ந்து மெட்டா நிறுவனம் இணைகிறது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக தற்போது பிஎஸ்என்எல் 5G சேவையை தொடங்கியுள்ளது.

Also Read: சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து – பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள்!

இதனை தொடர்ந்து 5G சிம் கார்டுகளை இந்திய முழுவதும் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதலில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 5G சிம் கார்டுகளை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் சேவையை விரிவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *