வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல் - பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்!!வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல் - பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்!!

Breaking News: வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல்: வங்கதேசத்தில் சில காரணங்களால் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் தான் போராட்டம் மோசமாகியது.

இதனால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்து விட்டதாக சில தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் பிரதமர் வீட்டில் இருந்து தங்களுக்கு கிடைத்த பொருட்களை எடுத்து சென்றுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்தார்.

அதுமட்டுமின்றி போக போக நிலைமை மோசம் ஆனதால் ஷேக் ஹசீனா தனது சகோதரியுடன் வங்கதேசத்தை விட்டே வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: மாணவர்களே குட் நியூஸ்.. நாளை & புதன்கிழமை இந்த 2 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

மேலும் ஷேக் ஹசீனா அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் தலைநகரம் அகர்தலாவை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அங்கிருந்து அவர்கள் லண்டனுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி நடைபெற இருப்பதாக என இராணுவத் தலைமை தளபதி நாட்டு மக்களிடம் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *