Breaking News: அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி: அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற Miss & Mrs உலக அழகி போட்டியில் சென்னையை சேர்ந்த தாய், மகள் அழகி பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர். அதாவது, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ராயல் க்ரூஸ் என்ற கப்பலில் தான் இந்த உலக அழகி போட்டி நடைபெற்றது. miss world people choice in america
அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி
9 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பிட்னஸ், கேள்வி பதில் சுற்று உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டது. miss world 2024
இப்போட்டியில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
அந்த வகையில் இந்த உலக அழகி போட்டிக்கு சென்னையை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி என்ற அம்மாவும்,
அவரின் மகளான சரிஹா சௌவுத்ரி என்பவரும் சேர்ந்து உலக அழகி போட்டியில் கலந்து கொண்டனர்.
பங்கேற்றது மட்டுமின்றி டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி “மிஸ் ஸ்பிரிட் ஆப் வோல்டு யுனிவர்ஸ் அன் மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு பீப்பிள்” என்ற பட்டத்தையும், அவரது மகள் சரிஹா சௌவுத்ரி “மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல் 2024” என்ற பட்டத்தை வென்றுள்ளார். பல முன்னணி நாடுகளுடன் போட்டியிட்ட அவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மகளுக்கு இது முதல் போட்டியாகும். ஆனால் தாய் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பல அழகி போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடந்த திருமதி உலக அழகி போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு “Miss International world people’s Choice winner 2022” என்ற பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா
சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து