Breaking News: வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்தாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு: வங்க தேசத்தில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. எதற்கு இந்த வன்முறை என்று கேட்டால் அங்கு படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்தாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு
ஆனால் கடந்த 1971 ம் ஆண்டு நடந்த போரில் உயிர் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு சிவில் சர்வீஸ் மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில், தற்போது வேலையில்லாமல் இருந்து மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது. Bangladesh cricketer Mortaza
இதனால் தான் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் விளைவாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. Bangladesh news
இந்நிலையில் வங்க தேசத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்றத்தின் உறுப்பினருமான மோர்தாசாவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். அதாவது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான பங்களாதேஷ் அவமி லீக் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பொருட்பேற்ற அவர் கட்சியின் கொறடாவாக செயல்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Bangladesh issue
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா