paris olympic: ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இதில் இந்தியாவுக்கு இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளனர்.
ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024
அந்த வகையில் தற்போது இந்தியா பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் இருக்கிறது. இதனை தொடர்ந்து மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மற்றும் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் ஒருவொருக்கொருவர் மோதினர்.
இதில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா 5-0 என்ற புள்ளி விவரத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். எனவே இந்த வெற்றி மூலம் இந்தியாவுக்கு குறைந்த பட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியான நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, தொடர்ந்து மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது.
Also Read: சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்: அமைச்சர்கள் விடுவித்த உத்தரவு ரத்து – நீதிமன்றம் அதிரடி!
எனவே இந்த இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட் என்பவரை எதிர்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.paris olympic wrestling final 2024
கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்
அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி
பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா