Breaking news: இஸ்ரோவின் சந்திராயன் – 3: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு அனுப்பிய சந்திரயான்-3 செயற்கைக்கோளில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளது. மேலும் இந்த திட்டத்தை வெற்றி பெற கிட்டத்தட்ட 1,000 இஸ்ரோ விஞ்ஞானிகள், இன்ஜினீயர்களும் உறுதுணையாக இருந்துள்ளார்.
குறிப்பாக திட்டத்தின் மூளையாக இருந்து செயல்பட்ட விஞ்ஞானிகள் எஸ்.சோமநாத் (இஸ்ரோ) தலைவர், உன்னிகிருஷ்ணன் நாயர் (இயக்குநர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம்), பி.வீரமுத்துவேல் (சந்திரயான்-3 திட்ட இயக்குநர், யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையம், பெங்களூரு).
இஸ்ரோவின் சந்திராயன் – 3
கே.கல்பனா (சந்திரயான்-3 துணை திட்ட இயக்குநர், யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம், பெங்களூரு), எம்.வனிதா (பெங்களூர் யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய துணை இயக்குநர்).வி.நாராயணன் (திருவனந்தபுரம் லிக்விட் புரொபல்ஷன் சிஸ்டம்ஸ் மைய இயக்குனர்), பி.என்.ராமகிருஷ்ணா (பெங்களூரு இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் அன்ட் கமாண்ட் நெட்வொர்க் (ஐஎஸ்டிஆர்ஏசி) இயக்குநர்) அனைவரும் முக்கிய அங்கமாக இருந்து வந்துள்ளனர்.
Also Read: முதுநிலை நீட் தேர்வு 2024 வினாத்தாள் கசிவு: ஒரு பேப்பர் 70 ஆயிரம் ரூபாயா? மீண்டும் வெடித்த பூகம்பம்!!
இந்நிலையில் சந்திரயான் – 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு ஒரு விருதை வழங்கியுள்ளது. அதாவது சந்திரயான் – 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் உட்பட 33 பேருக்கு ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024
சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்
மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்
வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு