சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் நல்லதா: நாம் சமைப்பதற்கு தேவையான பொருட்களுக்கு முக்கியமான ஒன்றுதான் எண்ணெய். இந்த பொருள் இல்லாமல் எந்த ஒரு சமையலும் செய்ய முடியாது. அப்படி சமையலுக்கு முக்கிய அங்கமாக இருந்து வரும் எண்ணெய் வைத்து சமைக்கும் பொழுது சில விஷயங்களை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் நல்லதா
எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய்: தற்போது நாம் மிக உயர்ந்த தரமான எண்ணெய்யான எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய்யை தான் பயன்படுத்தி வருகிறோம். இதை நாம் யூஸ் செய்யும் பொழுது நாம் குறைந்த வெப்பநிலையில் (சுமார் 190°C) சமைக்க உகந்ததாக இருக்கும். ஆனால் அதையே அதிக வெப்பநிலையில் சூடாக்கினால் அதன் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பாதிக்கப்படலாம். அதுமட்டுமின்றி இந்த எண்ணெய்யை சாலடுகள், டிரஸ்ஸிங் மற்றும் சமைத்த உணவுகளின் மேல் தெளிக்க பயன்படுத்த ஏற்றது.
விரஜின் ஆலிவ் எண்ணெய்: இந்த எண்ணெய் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெயை விட அதிக வெப்பநிலையில் (சுமார் 210°C) சமைக்க இது பொருத்தமானதாக இருக்க கூடும்.
குறிப்பாக வதக்குதல், வறுத்தல் மற்றும் பேக்கிங் போன்ற சமையல் முறைகளுக்கு இதை பயன்படுத்தலாம்.
ரீஃபைன்ட் ஆலிவ் எண்ணெய்: எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய் மற்றும் விரஜின் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் விட ரீஃபைன்ட் ஆலிவ் எண்ணெய் அதிக வெப்பநிலையில் (சுமார் 240°C) சமைக்க பொருத்தமானது.
Also Read: காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா? அப்ப இந்த ஆவணங்கள கரெக்டா எடுத்து வச்சுக்கோங்க!!
இப்படி ஒவ்வொரு வகை ஆலிவ் எண்ணெய்க்கும் “புகை புள்ளி” கண்டிப்பாக இருக்கும். அப்படி புகை புள்ளி என்றால் என்ன? என்பது குறித்து உங்களுக்கு கேள்வி எழும்பும், எண்ணெய் சூடாக்கப்படும் போது புகை வரும் வெப்ப நிலையை தான் இது குறிக்கிறது.
அப்படி புகை புள்ளியை விட அதிக வெப்பநிலையில் நாம் சூடாக்கினால், எண்ணெய் சிதைந்து தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை இது உருவாக்கும்.
இருப்பினும் இந்த ஆலிவ் எண்ணெய்க்கு எப்போதும் ஒரு தனித்துவமான சுவை இருக்கும்.
ஆனால் இது சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். உணவின் சுவையுடன் ஒத்துப்போகும் வகையான ஆலிவ் எண்ணெயை தேர்ந்தெடுப்பது அவசியம். அப்போது தான் சுவை அருமையாக தெரியும்.
ஆலிவ் எண்ணெய் மற்ற சமையல் எண்ணெய்களை விட விலை அதிகமாக இருக்கும்.