Education loans: கல்வி கடன் வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!Education loans: கல்வி கடன் வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

Education loans: கல்வி கடன் வேண்டுமா: தற்போதைய சூழ்நிலையில் ஏழை குடும்பத்தை சேர்ந்த நல்ல படிக்கும் மாணவர்கள் உயர் கல்வி படிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அப்படி அவர்கள் மேல் படிப்பு படிக்க விரும்பினாலும் கூட அவர்களால் அந்த இலக்கை எட்ட முடியாமல் போகிறது.

Education loans: கல்வி கடன் வேண்டுமா

அவர்களுக்காகவே தான் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான  படிப்புச் செலவுக்கு  மாணவர்களும் அவர்களது பெற்றோரும் வங்கிகள் மூலம் கல்விக் கடன் பெறுவது எப்படி என்கிற விவரங்கள் குறித்து என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

  • கல்லூரி போனஃபைட் சான்றிதழ்.
  • கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.
  • 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
  • பள்ளி மாற்று சான்றிதழ்.
  • பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.
  • இருப்பிடச் சான்றிதழ்.

கல்விக் கடனாக எவ்வளவு வழங்கப்படும்?

இந்தியாவில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கடனுக்கு அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும். மேலும் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் கொடுக்கப்படும். அதே போல் கல்லூரிக் கட்டணம், தேர்வு கட்டணம், உணவுக் கட்டணம், விடுதிக் கட்டணம், லேப்டாப், புராஜக்ட்,  நூலகம் மற்றும் லேபரட்டரி கட்டணம், புத்தகங்கள், ஸ்டடி டூர் போன்ற பல்வேறு படிப்பு தொடர்பான செலவுகளுக்கு கல்விக் கடன் பெற்று கொள்ளலாம்.

வட்டி எவ்வளவு?

ஒவ்வொரு வங்கிகளிலும் “பேஸ் ரேட்’ அடிப்படையில் தான் கல்விக் கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்து வருகிறது. அதே போல் வங்கிகளைப் பொறுத்து தான் கல்வி கடன் வட்டி விகிதம் மாறுபடும். கிட்டத்தட்ட 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதம் வரை வட்டி இருக்கலாம். மேலும் கடன் வாங்கும் மாணவர்கள் படிக்கும் போதே கடனை கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

எப்போது திருப்பிச் செலுத்த வேண்டும்?

கடன் பெறும் மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த ஓராண்டில் இருந்து அல்லது வேலைக்குப் போய் 6 மாதங்களிலிருந்து கல்விக் கடனை திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும். அதில் ரூ.7.5 லட்சம் வரை கடன் வாங்கிய மாணவர்கள், 10 ஆண்டுகளுக்குள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். அதை விட அதிகமாக கடன் பெறுபவர்கள் 15 ஆண்டுகளுக்குள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

Also Read: காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா? அப்ப இந்த ஆவணங்கள கரெக்டா எடுத்து வச்சுக்கோங்க!!

விண்ணப்பிப்பது எப்படி?

வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு எந்த வங்கியையும் நாம் அணுகலாம்.

முதலில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவில் அட்மிஷன் பெற்றிருக்க வேண்டும்.

அப்புறம் நீங்கள் படிக்க போகும் படிப்புக்கு ஆகும் செலவு குறித்த எஸ்டிமேட் கல்வி நிறுவனத்திடமிருந்து வாங்கி இருக்க வேண்டும்.

கல்விக் கடன் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வங்கிகளில் விண்ணப்பங்களை பெற்று நேரிலும் சமர்ப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *