தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் - 11 செ மீ வரை கொட்டி தீர்க்க போகும் கனமழை - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் - 11 செ மீ வரை கொட்டி தீர்க்க போகும் கனமழை - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

Breaking News: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்: தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனத்த மழை பொழிந்து வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை  7 முதல் 11 செமீ அளவு வரை கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

எனவே இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 14 மற்றும் 15ம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. tamil nadu

குறிப்பாக இன்று புதுச்சேரி காரைக்கால், கேரளா, கிழக்கு ராஜஸ்தான், பீகார், மேகாலயா, மாஹே மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். அதே போல் இன்று முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை வடமேற்கு இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய கூடும். orange alert

Also Read: தமிழ்நாட்டில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அரசு எடுத்த அதிரடி முடிவு!

இது தவிர சண்டிகர் மற்றும் அரியானாவிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கிழக்கு ராஜஸ்தானில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. India Meteorological Department

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்

வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *