Breaking News: தேசிய பறவை மயில் கறி சமைத்த யூடியூபர்: தற்போது வேகமாக சோசியல் மீடியாவில் வைரலாக வேண்டும் என்று சில சர்ச்சையான வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் சில பேர் போலீசிடம் மாட்டியுள்ளனர். அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு யூடியூபர் மயில் கறி எப்படி செய்வது குறித்து வீடியோ பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அதாவது தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார். இவர் பாரம்பரிய முறையில் உணவு வகைகளை சமைத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நம் தேசிய பறவையான மயிலை வைத்து பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் சமைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தேசிய பறவை மயில் கறி சமைத்த யூடியூபர்
ஆனால் நம்முடைய தேசிய பறவையான மயிலை கொள்வது மிகப்பெரிய குற்றம் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதனை தொடர்ந்து பேசிய காவல்துறை, கண்டிப்பாக அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Also Read: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் – 11 செ மீ வரை கொட்டி தீர்க்க போகும் கனமழை – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்த நிலையில், பிரணாய் மயில் கறி வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து அவர் நீக்கியுள்ளார். இருப்பினும் இப்படி சமைத்த அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024
சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்
மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்
வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு