Breaking News: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது இன்று கேள்வி நேரத்தில் பல திட்டங்கள் பற்றி விவாதம் நடைபெற்றது. அதில் எதிர்கட்சி தலைவர் சிவா ஒரு கேள்வியை எழுப்பினார்.
அதாவது புதுச்சேரியில் மத்திய ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திய போதிலும் எந்த ஒரு மருத்துவமனையும் இத்திட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை. ஏன் சொல்ல போனால் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கூட ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டையை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். medical insurance
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்
இது மாதிரி மக்கள் அவதி படாமல் இருக்க, அனைத்து ரேஷன் கார்டுகளையும் உள்ளடக்கிய காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுமா?” என்று கேட்டார். அதற்கு முதல்வர் ரங்கசாமி,” புதுச்சேரியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஓரளவுதான் பயன்பட்டுள்ளது. ration card holders
Also Read: ஹோட்டல் கூரையில் விழுந்த ஹெலிகாப்டர் – இரண்டு பேர் உயிரிழப்பு – மக்கள் வெளியேற்றம்!
இத்திட்டம் முழுமையான திட்டமாக செயல்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி சில மாநிலங்களில் காப்பீடு திட்டம் தனியாக வைத்துள்ளனர். எனவே இந்த திட்டத்தை மாற்றி முழுமையாக செயல்படுத்த உள்ளோம். அதன்படி புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.” என்று சொன்னார். puducherry cm rangaswamy
திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு
தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு !
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்