ஆன்லைன் தமிழ் செய்திகள் : டெங்கு காய்ச்சலை குறைக்க கியூடெங்கா தடுப்பூசி. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிப்படுகிறது. Qdenga Vaccine
டெங்கு காய்ச்சலை குறைக்க கியூடெங்கா தடுப்பூசி
இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் டெங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்ற நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சில உயிர்கள் பலியாகும் காட்சிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை நிரந்தரமாக காப்பாற்றுவதற்காக உலக சுகாதார அமைப்பு கடந்த மே மாதம் கியூடெங்கா தடுப்பூசியை ஒப்புதல் வழங்கியதில் நோயாளிகளுக்கு டெங்குவில் இருந்து நீண்டகால பாதுகாப்பு வழங்கும் திறனைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலகளவில் டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு கியூடெங்கா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 20,000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ஆசியாவிலிருந்து 13 ஆய்வுகளும் அமெரிக்காவிலிருந்து 6 ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக்கொண்டு இந்த உலக சுகாதார அமைப்பு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம் பட விவகாரம்: நடிகர் ரஞ்சித் மீது விசிக பரபரப்பு புகார்!
அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
“கியூடெங்கா தடுப்பூசியின் 2 தவணைகளையும் செலுத்திக்கொண்ட 90 சதவீத குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கு டெங்குவின் 4 வகையான நோய்களையும் எதிர்த்துப் போராட நோயாளிகளுக்கு தேவையான எதிா்ப்பு சக்தியை அதிகரித்துள்ளது. இதனால் இந்த தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்தினால் டெங்கு காய்ச்சல் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த தடுப்பூசி ஜப்பானில் உள்ள டகேதா மருத்துவ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அவர்கள் இதை கியூடெங்கா தடுப்பூசி ‘டிஏகே-003’ எனவும் அழைத்து வருகிறார்கள். எனவே டெங்குவால் பாதிக்கப்பட்டவா்கள், பாதிக்கப்படாதவா்கள் மற்றும் ஒரு தவணை மட்டும் செலுத்திக் கொள்வது மிகவும் அவசியம். மேலும் இந்த தடுப்பூசி டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பயன்பட்டாலும் கூட அதன் சைட் எஃபெக்ட் என்பது குறித்து இதுவரையும் எந்த தகவலும் வெளியாகவில்லை. dengue vaccine name new.
அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம்
ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும்