தமிழகத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் - சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!தமிழகத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் - சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

Breaking News: தமிழகத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம்: சென்னையில் உள்ள  புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளம் என்ற இடத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் உரையாற்றிய அவர், ” மக்கள் அனைவர்க்கும் என்னுடைய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள். இந்த சுதந்திரம் உடனே கிடைத்து விடவில்லை, கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேல் நம் முன்னோர்கள் போராடி வாங்கி கொடுத்த விடுதலை தான் இந்த சுதந்திரம்.

தமிழகத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம்

மேலும் திமுக அரசு ஆட்சியை கைபற்றியதில்   இருந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துளோம். குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் 65000 இளைஞர்களுக்கு அரசு பணி கிடைத்துள்ளது. 2026-ம் ஆண்டு ஜனவரிக்குள் 75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் குடும்பத்துக்காகவும் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குகிறது. அந்த வகையில் இப்பொழுது  “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் பொது பெயர் வகை மருந்துகள் மற்றும் பிற மருந்து வகைகளை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். அதுவும் இந்த மருந்தகங்கள் அடுத்த ஆண்டு தை பொங்கல் திருநாள் முதல் முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்படும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்திற்கு  ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும். principal pharmacy

Also Read: 78வது சுதந்திர தினம் 2024 – நள்ளிரவில் நடந்த பெண்கள் நடை மாரத்தான் – எங்கே தெரியுமா?

மேலும் இந்த “முதல்வர் மருந்தகம்” முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 78th independence day

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்

சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *