முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படைவீரர்களுக்கான அசத்தலான அறிவிப்பு!!முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படைவீரர்களுக்கான அசத்தலான அறிவிப்பு!!

Breaking News: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: இன்று 78- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய கொடியை ஏற்றி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு சார்பாக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்

இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். Mudalvarin Kakkum Karangal’ scheme

இதில் முதல்வர் மருந்தகம், காக்கும் கரங்கள் திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. முக்கிய அறிவிப்புகள் கீழே இதோ,

  • ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் விதமாக “முதல்வர் மருந்தகம்” திட்டம். இத்திட்டம் அடுத்த வருடம் பொங்கல் முதல் செயலுக்கு வர இருக்கும் நிலையில் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும்.
  • ஆர்மி, காவல் உள்ளிட்ட முன்னாள் படைவீரர்களுக்காக முதல்வரின் “காக்கும் கரங்கள் திட்டம்” கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் முன்னாள் படைவீரர் தொடங்கப்படும் தொழில்களுக்கு 30% மூலதன மானியமும், 3% வட்டி மானியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதே போல் நம் நாட்டுக்கு விடுதலை வாங்கி கொடுத்த போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.21,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். அதே போல் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000-ல் இருந்து ரூ.11,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • மேலும் இந்திய விடுதலைக்காக போராட்ட விதையை விதைத்த வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும்  மருது சகோதரர்கள், ராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத சேதுபதி, வ.உ.சி. வழித்தோன்றல்களுக்கு பெற்று வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 10,500 ஆக உயர்வு.
  • காஞ்சிபுரம் கொடுங்கையூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.
  • வருகிற 2026 ஜனவரி க்குள் 75000 க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி திட்ட மதிப்பில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா. chief minister mk stalin

Also Read: நடிகை குஷ்பூ திடீர் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? அவரே சொன்ன பகீர் தகவல்!

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்

சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *