Weather Report: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தென்மேற்கு பருவமழை தற்போது தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக வானிலை மையம் கூறியதாவது, ” மேற்கு வங்கம், வங்கதேசத்தை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறித்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நகரும்.
எனவே தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூரில் மதியம் 1 வரை மிதமான மழை பெய்யும்.
Also Read: அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை? பகீர் கிளப்பிய பாபா ராம்தேவ்!!
அதே போல் நீலகிரி, கோவையில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நெல்லை, கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கன்னியாகுமரியில் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்
சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்