Breaking News: கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்: இந்தியா முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தான். அதாவது “கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் பெண் மருத்துவர் கான்பரன்ஸ் ஹாலில் தூங்க சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக டெல்லியை சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வெடிக்க தொடங்கிய நிலையில் நாடு முழுவதும் அரசியல்வாதி முதல் சினிமா பிரபலங்கள் வரை கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் வேலை பார்த்த மருத்துவர் தான் இதற்கு காரணம் என்று Headset மூலம் தெரிய வந்த நிலையில், அவரை அரெஸ்ட் செய்து காவல்துறை விசாரணை செய்தனர்.
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்
அவர் ஒப்பு கொண்ட நிலையில் தற்போது இந்திய மருத்துவர்கள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ” கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு நடந்த வன்முறைக்காவும், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
Also Read: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
மேலும் அதே சமயத்தில் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும். ima
ஏதேனும் அவசர சிகிச்சை வந்தால் மட்டுமே மருத்துவர்கள் பார்ப்பார்கள். ஆனால் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது.nationwide doctors strike
அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது.
எனவே மருத்துவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தேசத்தின் ஆதரவை இந்திய மருத்துவர்கள் சங்கம் கோருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Kolkata doctor murder case issue
விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்
சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்