டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள் - 20 வருடம் ஆகியும் வியாபாரம் ஆகாத எஸ்.ஜே. சூர்யா படம்!!டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள் - 20 வருடம் ஆகியும் வியாபாரம் ஆகாத எஸ்.ஜே. சூர்யா படம்!!

Kollywood Cinema: டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள்: பொதுவாக மக்களை சோர்ந்து போக விடாமல் தொடர்ந்து என்டேர்டைன்மெண்ட்டாக தொலைக்காட்சி இருந்து வருகிறது.

அந்த தொலைக்காட்சியில் சீரியல் முதல் ரியாலிட்டி ஷோக்களையும் ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும் மேலும் மக்களை குஷி படுத்தும் விதமாக திரைப்படங்களை ஒளிபரப்புவது உண்டு.

டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

அதுவும் திரைக்கு வந்த சில நாட்களே ஆகும் புதிய படங்களை தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நாட்களில் ஒளிபரப்பி வருகின்றனர். ஆனால் படங்கள் வெளியாகி நீண்ட வருடங்கள் ஆன போதிலும் இன்னும் டிவியில் ஒளிபரப்பாமல் இருந்து வரும் சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நியூ திரைப்படம்:

எஸ்.ஜே. சூர்யா நடித்து இயக்கி கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நியூ. இப்படத்தில் அவருடன் சேர்ந்து சிம்ரன், தேவயானி, மணிவண்ணன், நாசர், ஜனகராஜ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆன போதிலும், ஒரு முறை கூட டிவியில் ஒளிபரப்பாகவில்லை. ஏன் என்றால் இப்படத்தின் சாட் லைட் உரிமையை எஸ்.ஜே. சூர்யா யாருக்கும் தரவில்லை. அதை அவரே சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறினார். தற்போது எஸ்.ஜே. சூர்யா நடிப்பு அரக்கனாக தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து:

சந்தோஷ் பி. ஜெயக்குமார் எழுதி இயக்கி கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த திரைப்படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து. இப்படத்தில் அடல்ட் காமெடி அதிகமாக இருந்ததால் டிவியில் இப்பொழுது வரை ஒளிபரப்பாகவில்லை. மேலும் இப்படம் தியேட்டரில் வெளியான சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்ததால் மட்டுமே படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.

Also Read: The Greatest of All Time Trailer ரிலீஸ் – டபுளாக வந்து மிரட்டிய தளபதி – ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இருக்கு!!

தி லெஜண்ட்:

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடையை நடத்தி வரும் அறிமுக நடிகர் அருள் “லெஜண்ட்” சரவணன் நடித்து கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் தி லெஜண்ட். இப்படத்தில் அவருடன் சேர்ந்து விவேக், யோகி பாபு, நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் சாட் லைட் உரிமையையும் எந்த டிவி நிறுவனத்திற்கும் லெஜெண்ட் கொடுக்காமல் இருக்கிறார்.அதனால் தான் இப்படம் டிவியில்  ஒளிபரப்பாகவில்லை. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்படி போடு… இது தான்யா Weekend

எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது

“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *