Thiruparappu water Falls: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் தான் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குற்றாலம் உள்ளிட்ட நீர் நிலைய இடங்களில் நீர் வரத்து அதிகமாக காணப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் ஆரவாரத்துடன் குளிக்க வந்து செல்கின்றனர்.
திற்பரப்பு அருவியில் குளிக்க தடை -Tirparappu Water Falls
அதே போல் கன்னியாகுமரி செல்லும் பகுதியில் அமைந்துள்ள திற்பரப்பு அருவியில் தினசரி ஆயிரத்திற்கும் மேலான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். மேலும் தற்போது மழை சீசன் என்பதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து குறைவாக காணப்படும் நிலையில் சுற்றுலா பயணிகள் சந்தோஷமாக குளித்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில் அவர்களுக்கு ஷாக்கிங் கொடுக்கும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ” தற்போது திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகமாகி கொண்டே போவதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை கனமழை காரணமாக 44.46 அடி நிரம்பியது.
Also Read: IPL 18ல் UNCAPPED PLAYER ஆக மாறுகிறாரா தல தோனி? வெளியான முக்கிய தகவல்!
எனவே வினாடிக்கு 625 கன அடி நீர்வரத்து உயர்வால் பாதுகாப்பு கருதி 375 கனஅடி உபரி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகமாக வர வாய்ப்பு இருக்கிறது. எனவே சுற்றுலா பயணிகளின் நலத்தை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான்
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை?