ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் இருக்கும் அவரது வீட்டுக்கு அருகில் சில மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்த நிலையில் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேரை காவல்துறை கைது செய்தது. இதையடுத்து பொன்னை பாலுவை விசாரித்த போது கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதால் அதற்கு பழிவாங்கவே இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – Armstrong murder case
இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ பக்கம் சென்ற நிலையில் கொலை வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட 23 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருப்பதாக துப்பு கண்டுபிடித்த காவல்துறை அவரை கைது செய்ய தொடர்ந்து தேடி வந்தனர்.
இதனை தொடர்ந்து பொற்கொடி ஆந்திராவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பொற்கொடியை சுற்றி வளைத்து பிடித்தனர். தற்போது அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அவாிடம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொற்கொடியின் பங்கு என்ன என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனா். SKSPREAD arcot suresh wife porkodi
இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான்
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை?