Breaking News: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடை வாயிலாக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாநில மற்றும் மத்திய அரசு மக்களுக்காக கொண்டு வரப்படும் திட்டங்களை நியாய விலை கடை வாயிலாக தான் கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் தற்போது ஷாக்கிங் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வரும் கிட்டத்தட்ட 35 ஆயிரம் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ration card holders
இன்னும் தெளிவாக சொல்ல போனால், பணிப்பதிவேடு பராமரிப்பு மற்றும் வங்கி மூலம் ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 5ம் தேதி இப்போராட்டம் நடைபெறவுள்ளது. tamilnadu government
Also Read: தமிழக மாணவர்களே குட் நியூஸ் – ஆகஸ்ட் 23ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – சற்றுமுன் வெளியான அறிவிப்பு!
இந்த முடிவு திருவள்ளூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே அன்று ரேஷன் கடை செயல்படாது என்று தெள்ளத் தெளிவாக தெரிவித்துள்ளது. tn ration shop worker
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்