மத்திய அரசு உயர்பதவிகளுக்கு லேட்டரல் என்ட்ரி முறை ரத்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த திட்டத்தை தற்போது ரத்து செய்துள்ளது. upsc lateral entry system
லேட்டரல் என்ட்ரி முறை ரத்து
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மத்திய அரசு உயர் பணிகள் :
தற்போது மத்திய அரசின் உயர் பதவிகளான இயக்குநர்கள், துணை செயலாளர்கள், இணைச் செயலர்கள் உள்ளிட்ட 45 பணி இடங்களுக்கு நேரடி நியமனம் மூலம்
அதிகாரிகளை நியமனம் செய்வதற்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பொதுவாக இந்த உயர் பதவிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியமர்த்துவது வழக்கம்.
ஆனால் தற்போது இந்த பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யப்பட்டால் தற்போது ஐஏஎஸ் முடித்துவிட்டு அதிகாரிகளாக வேலை பார்த்துவருபவர்கள் பிறகாலத்தில் மத்திய அரசின் உயர்பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு பறிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. central government
லேட்டரல் என்ட்ரி ( நேரடி நியமனம் ) :
இதனையடுத்து மத்திய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) என்பது இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி மீது நடத்தப்படும் தாக்குதல் என்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும்
தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் கூட இந்த அறிவிப்புக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் – எச்சரிக்கை கொடுத்த தமிழக அரசு!!
நேரடி நியமனம் முறை ரத்து :
அந்த வகையில் நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக யுபிஎஸ்சி அமைப்பின் தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில்,
வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நேரடி நியமன நடைமுறை இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாகவுள்ளார். அதனால் இந்த நேரடி நியமன முறை ரத்து செய்யப்படுகிறது எனக் கூறியுள்ளார்.