மதுரை மாநகராட்சி TNULM சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் அடிப்படையில் சமூக அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, வேட்பாளர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. tnulm recruitment 202
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Community Organizer (சமூக அமைப்பாளர்) – 05
சம்பளம் :
Rs.16,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் சிறந்த தகவல் தொடர்பு திறன் மிக்கவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குட்பட்ட நபராக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மதுரை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் Attendent, MPHW, Manager காலிப்பணியிடங்கள் உள்ளன – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
அனுப்ப வேண்டிய முகவரி :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள நகர வாழ்வாதார மையம் அல்லது மக்கள் கற்றல் மையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 21.08.2024
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 30.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நகர வாழ்வாதார மையம் வழியாக விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.