தற்போது நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி உத்தரவிட்டுள்ளது. actor Vadivelu’s compensation case against Singamuthu
சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நடிகர் வடிவேலு :
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களான வடிவேலும் சிங்கமுத்துவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து நடிக்காமல் இருந்து வந்தனர்.
இதனை தொடர்ந்து தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய நிலத்தை தனக்கு வாங்கிக் கொடுத்ததாக நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் இந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் இருக்கிறது.
சிங்கமுத்துவுக்கு எதிராக மற்றொரு மனு :
இதனையடுத்து நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக மற்றொரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் வடிவேலு. madras high Court orders
அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கமுத்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
என்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியுள்ளார் என்றும் அவர் பேசிய கருத்துக்கள் பொதுமக்கள் மற்றும் எனது ரசிகர்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெயரை களங்கப்படுத்தும் செயல் என்று அவர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு – இனி ஆன்லைனில் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும்!
நீதிமன்றம் அதிரடி உத்தரவு :
மேலும் சிங்கமுத்து ரூ.5 கோடியை தனக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்.
அத்துடன் என்னைப்பற்றி அவதூறு பரப்பி வரும் சிங்கமுத்துவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். actor Vadivelu
தற்போது இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது சிங்கமுத்து இரண்டு வாரத்துக்குள் இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது