இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஒரு சில பகுதிகளில் நீர் நிலையங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டு வருகிறது.
இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இதனால் அப்பகுதியில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. எனவே இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் இடங்களிலும் இன்று புதன்கிழமை (ஆக.21) முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. weather report
Also Read: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி – ஐஆர்சிடிசி விளக்கம்!
மேலும் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான தென்காசி, தேனி, கோவை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். weather news in tamil
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்