திருவனந்தபுரம்: ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - கடைசியில் 135 பயணிகள் நிலை என்ன?திருவனந்தபுரம்: ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - கடைசியில் 135 பயணிகள் நிலை என்ன?

திருவனந்தபுரம்: ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தான் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு மிரட்டல் விமான நிலையத்திற்கு வந்துள்ளது. thiruvananthapuram airport news

திருவனந்தபுரம்: ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அதாவது, ” மும்பையில் இருந்து 135 பயணிகளுடன் திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு தான் தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது. மேலும் அந்த விமானத்தை  யாரும் இல்லாத தனிமையான இடத்திற்கு கொண்டு சென்று பத்திரமாக நிறுத்தினார் விமானி. air india flight

அதில் பயணித்த 135 பயணிகளும் கடும் பீதியில் இருந்து வந்துள்ளனர். முதலில் குண்டு மிரட்டல் வந்ததாக தகவல் பரவிய அடுத்த நிமிஷமே, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கமாண்டோ படையினர், வெடிகுண்டு கண்டறியும் படையினர், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். bomb threat

Also Read: தமிழக அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு – 861 காலி பணி இடங்கள் – தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!

தனிமைப்படுத்தப்பட்ட விமானத்திற்கு சென்று பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டு வெளியேற்றப்பட்டனர்.

மேலும் 135 பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர்.  

இதனை தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் படையினர் விமானத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு 

UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்?

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு

ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *