ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்வையிட சென்றுள்ளார். அந்த சமயம் அவரை சுத்து போட்ட மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
இந்த சம்பவம் குறித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் தற்போது இது வரை 25க்கும் மேற்பட்ட நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் இந்த கைதானவர்கள் பழிவாங்கவே செய்தோம் என்று ஒப்புக்கொண்டனர்.
அதுமட்டுமின்றி திருவெங்கடம் என்ற குற்றவாளி தப்பிக்க முயற்சித்தாக கூறி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திருவேங்கடம் என்ற ரவுடி தலைமறைவானார். தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில், திருவேங்கடம் துபாயில் இருந்து இன்று(ஆக 23) அதிகாலை சென்னை வந்த போது விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
Also Read: TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ் – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து சென்னை செம்பியம் காவல் துறையினரிடம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் காவல் துறையினர் திருவேங்கடத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். armstrong murder case
தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு
UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்?
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு
ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு