உங்க உடம்பில் வெண்புள்ளிகள் பாதிப்பு இருக்கா: இப்போது இருக்கும் காலகட்டத்தில் வெண்புள்ளிகள் நோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நோய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த நோய் முதலில் எதற்கு வருகிறது தெரியுமா?.
உங்க உடம்பில் வெண்புள்ளிகள் பாதிப்பு இருக்கா
உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இருக்கும் உணவுப் பொருட்கள் குறைபாடு காரணமாக தான் வெண்புள்ளி ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி மரபணு நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் வைரஸ் கிருமிகள் தாக்கம் காரணமாகவும் கூட இந்த வெண்புள்ளிகள் ஏற்படலாம். இப்படி நம்முடைய உடலில் வெண் புள்ளிகள் வந்தால் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அப்படி வெண்புள்ளிகள் ஏற்பட்டால் நீங்கள் மீன் வகைகள், தானியங்கள் மற்றும் கோதுமை கலந்து பொருட்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். குறிப்பாக வைட்டமின் A சத்து நிறைந்த மஞ்சள் சிவப்பு பச்சை நிற காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். குறிப்பாக பழ வகைகளில் மாம்பழம், பப்பாளி போன்றவை முக்கியமாக சாப்பிட வேண்டும்.
Also Read: ஒரு முஸ்லிம் கூட இல்லாத நாடு எது? அடேங்கப்பா இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!
அதே போல வைட்டமின் ஈ சத்து அதிகம் கொண்ட விதைகள், முளை கட்டிய பயிர் வகைகள், பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்றவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் சேர்த்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி சூரிய ஒளி அதிகம் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த நோய் இல்லாதவர்கள் ஷாம்பு மற்றும் ரசாயனம் கலந்த எண்ணெய் போன்றவைகளை பயன்படுத்துவதை வெண்புள்ளி ஏற்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.