பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு - பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி இலவசம் !பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு - பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி இலவசம் !

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு வரும் பகதர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். palani International Muthamizh Murugan Maanadu 2024

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் இரண்டு நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற இந்து சமய அறநிலைத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடத்திடத் தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

இதனை தொடர்ந்து இந்த மாநாடு பழனி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் இதில் ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும், உலக அளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும், ஆதீனங்களும் மற்றும் வெளிநாட்டுப் பக்தர்களும் கலந்துகொள்ள இருப்பதையொட்டி,

தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மாநாடு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

அத்துடன் மாநாட்டில் குன்று போல் மலை வடிவமைத்து அதன் மேல் முருகன் இருப்பது போலவும் மற்றும் பல வகையான சாமி சிலைகளும் மிகப்பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் இறுதிக் கட்ட பணிகளைப் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் பார்வையிட்டார்.

அந்த வகையில் சிறப்பு ஏற்பாடு பணிகள் குறித்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கவனத்திற்கும் கொண்டு சென்று இருக்கிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம் – எப்போது நடைபெறுகிறது  தெரியுமா?

இதனை தொடர்ந்து முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

அதோடு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது அனுமதியும் இலவசம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

மாநாட்டினை காண வரும் பொதுமக்கள் மாநாடு தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 04545 241 471, 1800 425 99 25 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டுப்பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *