நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடம் இடிப்பு - ஹைதராபாத் பேரிடர் மீட்பு, பாதுகாப்பு முகமை நடவடிக்கை !நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடம் இடிப்பு - ஹைதராபாத் பேரிடர் மீட்பு, பாதுகாப்பு முகமை நடவடிக்கை !

ஹைதாராபாத்தில் நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடம் இடிப்பு, ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என குற்றசாட்டு எழுந்த நிலையில் பேரிடர் மீட்பு, பாதுகாப்பு முகமை நடவடிக்கை. Actor Nagarjuna’s N Convention Arena in Hyderabad was demolished

முன்னணி தெலுங்கு நடிகரான நாகர்ஜுனாவுக்கு சொந்தமான N-Convention மையத்தை ஹைதாராபாத் பேரிடர் மேலாண்மை முகமை இடித்துள்ளது. இதனால் ஹைதாராபாத் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் மாதப்பூரில் உள்ள இந்த அரங்கு 27 ஆயிரம் சதுர அடியில், 3000 பேர் அமரக் கூடிய வகையில் நிறுவப்பட்ட ஒரு பிரம்மாண்ட அரங்காகும்.

அரசு விதிகளுக்குப் புறம்பாக ஏரியை அழித்து கட்டிடம் எழுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான பிரம்மாண்ட அரங்கை இடிக்கும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Actor Nagarjuna

N Convention என்ற பெயரிலான இந்த அரங்கை N 3 என்டர்ப்ரைசஸ் நடிகர், தயாரிப்பாளர் நாகர்ஜுனா அக்கினேனி மற்றும் நல்லா ப்ரீத்தம் ஆகியோர் இணைந்து நடத்தும் நிறுவனமாகும்.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் அரங்கத்துக்கு வந்த ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சீமான் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் எக்ஸ் தளத்தில் பதிவு !

இதனையடுத்து நாகர்ஜுனாவின் என் கன்வென்ஷன் அரங்கம் தும்மிடிகுண்டா ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக மழை நீர் வடிகால் தடைபட்டு மழை பெய்யும் போதெல்லாம் 100 அடி சாலை, ஐயப்பா காலனி மற்றும் பிற பகுதிகள் வெள்ளக்காடாக ஆகின்றன என்ற புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *