சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா கார் ரேஸ் - போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின் தகவல் !சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா கார் ரேஸ் - போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின் தகவல் !

தற்போது சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா கார் ரேஸ் காரணமாக எந்தவித போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் நடைபெற உள்ள நிலையில் அது தொடர்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி மற்றும் 1 ஆம் தேதி ஆகிய இரு தேதிகளில் தமிழ்நாட்டின் சென்னையில் முதல்முறையாக எஃப் 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தைத் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து அரசு உயர் அதிகாரிகளோடு நடத்தினோம்.

மேலும் இந்த கார் பந்தயத்திற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 8,000 பேர் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சனிக்கிழமை காலை மட்டும் பொதுமக்கள் இலவசமாக கார் ரேஸை பார்ப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடம் இடிப்பு – ஹைதராபாத் பேரிடர் மீட்பு, பாதுகாப்பு முகமை நடவடிக்கை !

இதனையடுத்து சனிக்கிழமை நைட் ரேஸ் இரவு 10:30 மணி வரைக்கும் நடைபெறுகிறது. மேலும் இந்த ஃபார்முலா கார் ரேஸ் நடைபெறுவதால் எந்தவிதமான போக்குவரத்து இடையூறும் ஏற்படாமல் இருக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *