மாணவர்களுக்கு குட் நியூஸ்: பொதுவாக தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நாட்களிலோ அல்லது அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து உள்ளூர் விடுமுறை தொடர்பான அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். local holiday
அந்த வகையில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இந்த திருவிழா 10 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறும்.
மாணவர்களுக்கு குட் நியூஸ்
அதன்படி இந்த திருவிழா வருகிற ஆகஸ்ட் 29ம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் இந்த கொடியேற்றத்தை பார்க்க தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதையடுத்து பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளை முன்னிட்டு நாகை, கீழ்வேளூர் உள்ளிட்ட வட்டங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. school and college leave news
Also Read: தமிழகத்தில் செப்.1 வரை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
எனவே மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் எழுத போகும் மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.
அதுமட்டுமின்றி வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 29ம் தேதி வேலை நாளாகும் என மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். Nagapattinam tamil nadu
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்
திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு