கங்கை ஆற்றில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து 3 பேர் பலி: இன்றைய காலகட்டத்தில் வாழும் பெரும்பாலான இளைஞர்கள் செல்பி மோகத்தில் இருந்து வருகின்றனர். எங்கே சென்றாலும் சரி போனை எடுத்து கொண்டு ஆபத்தான இடம் என்று தெரிந்தும் கூட உயிர் மேல் பயம் இல்லாமல் செல்பி எடுக்க அதிக நாட்டம் காட்டி வருகின்றனர்.
கங்கை ஆற்றில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து 3 பேர் பலி
தற்போது செல்பி எடுக்க முயன்ற போது ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ” உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருக்கும் புனித தலங்களை சுற்றி பார்ப்பதற்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 நண்பர்கள் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சென்றுள்ளனர். எல்லா இடத்தையும் சுற்றி பார்த்து செல்பி எடுத்து கொண்டு மகிழ்ந்தனர். selfie
அந்த வகையில் கங்கை ஆற்றின் அருகே செல்பி எடுக்க முயன்றபோது, சோனா சிங் (19) என்ற மருத்துவ மாணவி ஆற்றில் தவறி விழுந்துள்ளார். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அந்த மாணவியை காப்பாற்ற உடனே அவரது நண்பர்களான ரிஷி, வைபவ் சிங் ஆகியோரும் ஆற்றில் குதித்துள்ளனர். தண்ணீர் வேகமாக சென்றதால் மூவரும் அடித்து சென்ற நிலையில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். death sad news
Also Read: திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி – என்ன நடந்தது?
இதையடுத்து அவர்களின் உடல்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக இறங்கிய நிலையில், வைபவ் சிங் என்ற இளைஞரின் உடலை அவர்கள் மீட்டனர்.
மேலும் இரண்டு பேர் உடலை தொடர்ந்து தேடி வருகின்றனர். செல்பி எடுக்க போய் மூவர் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ganga river
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்
திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு