தற்போது மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் தொடர்பான நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் :
மத்திய அரசின் திட்டமான சர்வ சிக்க்ஷ அபியான் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய முதல் தவணை தொகையான ரூ.573 கோடியை மத்திய பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனை தொடர்ந்து தேசிய கல்வி கொள்கையை நிராகரித்ததால் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டத்திற்கான நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
நிதி ஒதுக்க கால தாமதம் :
இந்நிலையில் 2024 – 25 கல்வியாண்டில் SSA திட்டத்திற்கு மத்திய அரசு 4 தவணைகளில் ரூ.2152 கோடி வழங்க வேண்டும்.
மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது – சேதத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு !
இதில் முதல் தவணையாக ரூ.573 கோடியை ஜூன் மாதமே வழங்கியிருக்க வேண்டிய நிலையில் பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசு பதிலளிக்க வில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.