இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கப் பயண திட்டம் பற்றிய முழு தகவல்ககள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் மற்றும் சந்திப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கப் பயண திட்டம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணத் திட்டம் :
தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்ப்பதிற்காக இன்று அமெரிக்கா செல்ல உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பயண திட்டமானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
27.08.2024 இன்றிரவு 10 மணிக்கு சென்னை விமானநிலையத்திலிருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நாளை (28.08.2024) சான் பிரான்சிஸ்கோ செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamil Nadu Chief Minister M.K.Stalin’s america visit Travel Plan update
ஆகஸ்ட் 31ம் தேதி புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்கிறார்.
செப்டெம்பர் 2ம் தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோ புறப்பட்டு செல்கிறார் என கூறப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் கவனத்திற்கு – ஆதார் கார்டு புதுப்பிக்க செப்.14 தான் கடைசி – ஆதார் ஆணையம் அறிவிப்பு
செப் 7ம் தேதி சிகாகோவில் உள்ள அயலக தமிழர்களை சந்தித்து பேச உள்ளார்.
செப்டெம்பர் 12ம் தேதி வரை சிகாகோவில் தங்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள நிறுவன அதிகாரிகள், கூகிள் CEO சுந்தர் பிச்சை ஆகியோரை சந்தித்து பேசுகிறார். மேலும் அன்றே தமிழ்நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.