தவெக கட்சி கொடியில் உள்ள யானை சின்னம் - பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் !தவெக கட்சி கொடியில் உள்ள யானை சின்னம் - பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் !

நடிகர் விஜய்யின் தவெக கட்சி கொடியில் உள்ள யானை சின்னம் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து, அதனை நீக்குமாறு பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். Tamilaga Vettri Kazhagam party

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில் தொடர்ந்து அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கட்சிக்கான அதிகாரப்பூர்வ பாடலும் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட கொடியில் சிகப்பு, மஞ்சள் நிறத்தில் இருந்த கொடியின் மத்தியில் யானைகள் வாகைப் பூ, 28 நட்சத்திரங்கள் எனப் பல அடையாளங்களும், குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன. Tamilaga Vettri Kazhagam party Elephant symbol in flag

அந்த வகையில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை விஜய்யின் த.வெ.க கொடியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறிய அக்கட்சியின் தமிழக தலைவர் ஆனந்தன், உடனடியாக யானை சின்னத்தை கொடியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்போன் என கருத்து தெரிவித்திருந்தார்.

நடிகர் மோகன்லால் ராஜினாமா – கலைந்தது மலையாள நடிகர் சங்கம்!

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை நடிகர் விஜய் அவருடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியில் பயன்படுத்த எதிர்ப்பு மற்றும் ஆட்சேபனை தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனுவை பகுஜன் சமாஜ் கட்சியினர் கொடுத்துள்ளனர்.

அத்துடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Bahujan Samaj Party Complaint to Election Commission

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *