சென்னை தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து: சமீபத்தில் ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள “எசென்ஷியா” என்ற மருந்து தனியார் நிறுவனத்தில் கொதிகலன் (Boiler)வெடித்து சிதறியது. இந்த விபத்தில் இந்த விபத்தில் 17 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். private pharmaceutical Softgel company 2024
சென்னை தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
இந்த விவகாரமே இன்னும் ஓயாமல் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு மருந்து நிறுவனம் தீ பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை கேளம்பாக்கம் – வண்டலூர் சாலை புதுப்பாக்கத்தில் Softgel எனும் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 700க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். chennai fire accidents
இந்த சூழலில் இன்று அந்த நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் தீவிரமாக பரவிய நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். Softgel
Also Read: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
மேலும் நிறுவனத்தில் சிக்கி இருந்த சுமார் 700 பணியாளர்களை பாதுகாப்பாக காப்பாற்றி வெளியேற்றினார்கள்.
ஏற்பட்ட தீ விபத்தால் நிறுவனம் முழுவதும் புகை மூட்டமாக இருந்ததால் 2 பெண் பணியாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் அதிர்ஷ்டவசமாக எந்த வித உயிரிழப்பு ஏற்படவில்லை. chennai private pharmaceutical Softgel company
திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி
விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?
ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்