என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா? Y Chromosome மறைந்து வருவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்: ஆண்கள் உடம்பில் காணப்படும் Y குரோமோசோம்கள் தற்போது மறைந்து வருவதாக உயிரியலாளர்கள் செய்த ஆய்வின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாவற்றிலும் மாற்றம் அடைந்து வருகிறது. எனவே இதனால் மனிதர்களில் இருக்கும் 2 பாலின குரோமோசோம்களில் ஒன்றான Y குரோமோசோம் எவ்வாறு மறைந்து போக வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக ஆண்களின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக Y குரோமோசோம் இருந்து வருகிறது. அந்த Y குரோமோசோம் சிறியதாக இருந்தாலும் கூட அது SRY மரபணுவை கொண்டுள்ளது.
இது தான் ஆண் பண்புகளை வளர்ப்பதற்கான பாதையைத் தூண்டுவதாக சொல்லப்படுகிறது. இந்த SRY மரபணு ஒரு பெண் கருத்தரித்த 12 வாரங்களுக்குப் பிறகு தான் செயல்படுத்தப்படுகிறது.
என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா? Y Chromosome மறைந்து வருவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்!!
அதன் பின்னர் தான் அந்த மரபணு டெஸ்டோஸ்டிரோனை உருவாக்கி, ஆண்களின் உடல் பண்புகளை வடிவமைத்தல் மற்றும் உருவாக்கத்திற்கு வழிவகுக்க காரணமாக இருக்கிறது. இதை தொடர்ந்து இது குறித்து புகழ்பெற்ற மரபியல் பேராசிரியரும் ஜெனிஃபர் ஏ. மார்ஷல் கிரேவ்ஸின் சில வார்த்தைகள் பேசியுள்ளார்.
Also Read: தவெக முதல் மாநில மாநாடு? காவல்துறையை நாடிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த்!
அதாவது கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில், அதன் அசல் 1,438 மரபணுக்களில் 1,393 ஐ இழந்துவிட்டது, 45 மரபணுக்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் Y குரோமோசோமின் நேரம் முடிந்துவிட்டதாகவும், இப்படியே தொடர்ந்தால் 11 மில்லியன் ஆண்டுகளுக்குள் முற்றிலும் Y குரோமோசோம் மறைந்துவிடும். இதனால் ஆண் சந்ததியின் எதிர்காலம் மற்றும் மனித உயிர் வாழ்வு பற்றிய அச்சத்தை எழுப்புவதாகவும் ஜெனிஃபர் ஏ.மார்ஷல் கவலை தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி
விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?
ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்