அர்ஜென்டினாவில் AC மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்: இன்றைய உலகத்தில் தற்போது புதுப்புது நோய்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா, HIV, காலரா, டெங்கு காய்ச்சல், குரங்கு அம்மை போன்ற நோய்கள் இப்பொழுது வரை மக்களிடையே காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அர்ஜென்டினாவில் தற்போது ஏசி.யில் இருந்து புதிய வகை நோய் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, ” லெஜியோனேயர்ஸ் எனப்படும் நோய் தான் ஏசி மூலம் பரவி வருகிறதாம். இது, லெஜியோனெல்லா என்ற பாக்டீரியாவால் ஏற்பட்டு, நுரையீரல் பாதிப்பதாக கூறப்படுகிறது. ac machine
அர்ஜென்டினாவில் AC மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்
இந்த நோய் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டு விட்டால் அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுமாம். தற்போது அதே அறிகுறிகளுடன் தான் நான்கு பேர் சான்-மிகுவல் டி-டுகுமான் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்களாம். Argentina
Also Read: கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை – இந்திய வானிலை மையம் அறிவிப்பு!
தற்போது அந்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த 7 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவ வில்லை என கூறப்படுகிறது. legionnaires new disease
திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி
விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?
ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்