மலையாள நடிகர் முகேஷ் MLA தலைமறைவு: கேரளாவில் மலையாள நடிகைகள் நடிகர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை சில வருடங்களுக்கு முன்னர் அரசு அமைத்தது.
மலையாள நடிகர் முகேஷ் MLA தலைமறைவு
அதன்படி கடந்த 2019ம் ஆண்டு இந்தக் குழு ஒரு அறிக்கையை தயார் செய்த போதிலும் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அந்த அறிக்கை வெளியாகி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டினார்.
அவரை தொடர்ந்து மலையாள நடிகைகள் பல பேர் தானும் பாலியல் ரீதியாக துன்புறுத்த பட்டேன் என்று வெளியே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். actor mukesh mla
அதன்படி, நடிகை மினு முனீர் என்பவர் மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு, நடிகர் இடைவேளை பாபு ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.
Also Read: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று (28.08.2024) வந்த குட் நியூஸ்.. தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!
இந்த குற்றச்சாட்டு மலையாள சினிமாவில் பெரும் பூகம்பத்தை கிளப்பிய நிலையில், இது குறித்து நடிகர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில், தலைவர் நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அத்துடன், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்தனர். இந்த சூழலில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் மீது கொச்சி மரடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நடிகர் முகேஷ் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Malayalam actor Mukesh MLA absconding
மக்களே ஜாக்கிரதை – AC மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்
கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?