இனி பாலியல் குற்றவாளிகளுக்கு  7 நாட்களில் மரண தண்டனை - முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி!!இனி பாலியல் குற்றவாளிகளுக்கு  7 நாட்களில் மரண தண்டனை - முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி!!

முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி: தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்த போதிலும் இது மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி

இந்த சம்பவம் குறித்து பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மட்டுமின்றி மாணவர்களும் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனால் காவல்துறைக்கும் மாணவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு நிறுவன நாள் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்று இருந்தார்.

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், ” திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் நிறுவன நாள் பாலியல் வன்கொடுமைக்குள்ளானவருக்கான நாளாக அர்ப்பணிக்கிறோம். சமீபத்தில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் கொடுமை வேதனை அளிக்கிறது. kolkata rape case

Also Read: 2024ல் இரண்டாவது புயல் உருவாக வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இது மாதிரியான சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அடுத்த வாரம் நடக்க இருக்கும் மேற்கு வங்க மாநில சட்டசபையில்  இனி பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் மரண தண்டனை விதிக்க சட்டம் கொண்டு வரப்படும். மேலும் வருகிற ஆகஸ்ட் 31ம்  தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கோரி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். இதில் முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார். cm mamata banerjee

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் 

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *