இரண்டாம் ஆண்டு பி.எட் தேர்வு வினாத்தாள் கசிவு - தமிழ்நாடு உயர் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை !இரண்டாம் ஆண்டு பி.எட் தேர்வு வினாத்தாள் கசிவு - தமிழ்நாடு உயர் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை !

தற்போது இரண்டாம் ஆண்டு பி.எட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்தை தொடர்ந்து, இதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. B.Ed Exam Second Year Question Paper Leaked

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தக்கூடிய பி.எட் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வானது கடந்த 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பி.எட் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான 4வது செமஸ்டரில் creating an inclusive school என்ற பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு நடக்கவிருந்த தேர்வு பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியான சம்பவம் தேர்வர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பான தகவல் தமிழ்நாடு உயர்கல்வி துறையின் கவனத்திற்குச் சென்றதை தொடர்ந்து கசிந்த வினாத்தாள் திரும்ப பெறப்பட்டுள்ளது.

இனி பாலியல் குற்றவாளிகளுக்கு  7 நாட்களில் மரண தண்டனை – முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி!!

இதனையடுத்து தமிழ்நாடு உயர் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் காலை 9.15 மணிக்குள் புதிய வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அத்துடன் பழைய வினாத்தாளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தேர்வு மையங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்த வினாத்தாள் கசியவிடப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பி.எட் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ராமகிருஷணன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு தற்போது ராஜசேகர் புதிய பதிவாளராக உயர் கல்வித்துறை நியமித்துள்ளது.

அத்துடன் கடந்த ஒன்னறை ஆண்டுகளாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு புதிதாகத் துணைவேந்தர் நியமிக்கப்படாததே இந்த மாதிரியான முறைகேடுகள் நடப்பதற்குக் காரணம் என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *