தற்போது சென்னை ஃபார்முலா – 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு, மேலும் பந்தயத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை ஃபார்முலா – 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஃபார்முலா 4 கார் பந்தயம் :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளது.
அந்த வகையில் கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்குத் தடை விதிக்கக்கோரி,
தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். Formula 4 car race in Chennai
வழக்கு விசாரணை :
இதனையடுத்து மனுதாரர் தரப்பிலும், எதிர் தரப்பிலும் காரசார விவாதங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையானது மதியம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பிறகு இந்த வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அந்த வகையில் அரசு குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி,
கார் பந்தயத்தால் போக்குவரத்துக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்த வரைபடத்தைச் சமர்ப்பித்து நீதிபதிகளிடம் விளக்கினார்.
இந்தியாவில் Multistrada V4 RS பைக் அறிமுகம் – Ducati India நிறுவனம் அறிவிப்பு !
உயர்நீதிமன்றம் அனுமதி :
இதனை தொடர்ந்து எப்.ஐ.ஏ சான்றிதழ் கார் பந்தயம் தொடங்க உள்ள மூன்று மணி நேரத்திற்குள் தான் கிடைக்கும். அந்த நேரத்தில் தான் சாலையின் தரத்தை ஆய்வு செய்து தருவார்கள் எனத் தெரிவித்தார்.
அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சனிக்கிழமை 12 மணிக்குள் எப்.ஐ.ஏ சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அத்துடன் மனுதாரர் தரப்பிற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி விடுங்கள் என்றதுடன்,
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எந்த தடையும் இல்லை எனத் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விரிவான தீர்ப்பை இன்று மாலை உயர்நீதிமன்றம் பிறப்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.