குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்: குஜராத் மாநிலத்தில் இதுவரை பெய்யாத கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜாம்நகர், சௌராஷ்டிரா, தேவபூமி துரவாகா, ராஜ்கோட் மற்றும் போர்பந்தர் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ” குஜராத் மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வந்ததால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
இதற்கிடையில் வதோதராவில் பெய்த கனமழையால் விஸ்வாமித்ரி நதி உடைத்துக் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. அதனால் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 17,800 பேர் வெளியேற்றப்பட்டனர்.
Also Read: பாராலிம்பிக் போட்டிகள் 2024: இந்திய வீராங்கனை அவனி லேக்காரா தங்கப்பதக்கம் வென்றார்!!
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ராணுவம், இந்திய விமானப்படை ஆகியோர் மக்களை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் கனமழை நிலவரம் குறித்து விசாரித்துள்ளார். மத்திய அரசின் அனைத்து ஆதரவையும் உதவியையும் உறுதி செய்தார் என கூறப்படுகிறது. gujarat floods red alert
மக்களே ஜாக்கிரதை – AC மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்
கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?