பிரேசில் நாட்டில் X தளத்திற்கு தற்காலிக தடை: பிரபல பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க் சில வருடங்களுக்கு முன்னர் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கினார். அதன்பிறகு எக்ஸ் வலைத்தளம் என்று பெயரை மாற்றினார். இதையடுத்து அந்த வலைத்தளத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி ஊழியர்களை பணி நீக்கம் செய்து வந்தார். elon musk company
பிரேசில் நாட்டில் X தளத்திற்கு தற்காலிக தடை
குறிப்பாக பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடினார்.
மேலும் ஊழியர்களை அதிரடியாக நீக்கினார். அதுமட்டுமின்றி எக்ஸ் அலுவலகம் மூடப்பட்டாலும் கூட தொடர்ந்து எக்ஸ் வலைத்தளம் செயல்படும் என்று தெரிவித்திருந்தார். Supreme Court
இதனை தொடர்ந்து இந்த வழக்கு பிரேசில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், எக்ஸ் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் இதை எலான் மஸ்க் ஏற்க மறுத்துள்ளார். brazil app suspend
Also Read: ஸ்டார்லைனர் விண்கலம் எப்போது பூமிக்கு திரும்பும்? சுனிதா வில்லியம்ஸ் நிலைமை என்ன? நாசா தகவல்!!
இந்நிலையில் பிரேசில் நாட்டில் எக்ஸ் X தளத்திற்க்கு தற்காலிக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அடுத்து 24 மணி நேரத்திற்குள் எக்ஸ் தளத்தை பிரேசில் நாட்டில் இருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார்.elon musk x app
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை