ஹைதராபாத்தில் வாடிக்கையாளர் லேப்டாப்பை திருடிய டெலிவரி பாய்: தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் இருந்து வருகிறது. இதனாலே swiggy மற்றும் somoto போன்ற நிறுவனங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் அங்கம் வகித்து வருகிறது. தற்போது உணவு மட்டுமின்றி பல்வேறு பொருட்களை டெலிவரி செய்யும் விதமாக புது புது வசதிகளை கொண்டு வருகிறது.
ஹைதராபாத்தில் வாடிக்கையாளர் லேப்டாப்பை திருடிய டெலிவரி பாய்
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் டெலிவரி மூலம் சில தவறுகள் நடந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஹைதராபாத் மாநிலத்தில் ஒரு ஊழியர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஹைதராபாத் மாநிலத்தில் ஒரு பெண் தனது கணவரிடம் விலை உயர்ந்த லேப்டாப்பை ஒப்படைக்குமாறு டெலிவரி ஊழியரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த ஊழியர் லேப்டாப்பை தனது கணவரிடம் கொடுக்காமல் திருடி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் என்னுடைய ஆர்டரை பிக்கப் செய்த கொஞ்ச நேரத்திலேயே டெலிவரி பாய் நம்பர் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
Also Read: முதல்வர் ஸ்டாலின் கொடுத்த கிப்ட் பாக்ஸில் என்ன உள்ளது? அடேங்கப்பா இத்தனை பொருள் இருக்கா!
இதனை தொடர்ந்து வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட போதிலும் சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் தனது ஆர்டரை நண்பரின் login மூலம் பிக்கப் செய்தது தெரிய வந்தது. இதற்கிடையில் திருடி சென்ற நபர் தனக்கு தொடர்பு கொண்ட நிலையில் 15 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே லேப்டாப்பை திரும்ப தருவேன் என்று மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். Hyderabad
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை