வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக செப். 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செப். 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி :
தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. Depression forms in Bay of Bengal
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
இந்நிலையில் இன்று முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து மன்னார்வளைகுடா தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு சுமார் 45 கிலோ மீட்டரில் இருந்து 65 கிலோமீட்டர் வரை சூறைக்காற்று வீசக்கூடும்.
அதனை போல் வடமேற்கு அரபிக்கடல் பகுதியில் 70 லிருந்து 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவே மீனவர்கள் யாரும் செப்டம்பர் 4ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லைனர் விண்கலம் எப்போது பூமிக்கு திரும்பும்? சுனிதா வில்லியம்ஸ் நிலைமை என்ன? நாசா தகவல்!!
மேலும் மத்திய, மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி விசாகப்பட்டினம்-கோபால்பூர் இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.