டிரைவர் இல்லாமல் ஜாகுவார் காரில் பயணித்த முதல்வர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27ம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொண்டார். அவர் பயணத்தின் முதற்கட்டமாக சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தார்.
டிரைவர் இல்லாமல் ஜாகுவார் காரில் பயணித்த முதல்வர்
கிட்டத்தட்ட முதல் நாளிலே 1000 கோடி முதலீட்டு ஒப்பந்தம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று முக ஸ்டாலின் சிகாகோ செல்கிறார். அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஒப்பந்தம் தொடர்பாக பேச இருக்கிறார்.
இதையடுத்து வருகிற செப் 7 ஆம் தேதி சிகாகோ வாழ் தமிழர்களை சந்திக்கிறார். பின்னர் பயணத்தை ஒவ்வொன்றாக முடித்துக்கொண்டு, வரும் செப் 14 ஆம் தேதி சென்னை திரும்ப இருக்கிறார். இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓட்டுநர் இல்லா தானியங்கி காரில் பயணிக்கும் விதமாக ஒரு வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
Also Read: உச்ச நீதிமன்றம் புதிய கொடியை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி – இதை எல்லாம் நோட் பண்ணீங்களா!
அதாவது ஜாகுவார் நிறுவனம் தயாரித்த தானியங்கி காரில் தான் முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்துள்ளார். ஓட்டுநர் இல்லாமல் கார் இயங்கும் டெக்னாலஜி வளர்ச்சியை கண்டு முதல்வர் வியந்துள்ளார். மேலும் சிகாகோவில் இருக்கும் தமிழர்கள் முதலவரை ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை