அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜுக்கும், படக்குழுவினருக்கும் எக்ஸ் தளத்தின் வழியாக தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மாரி செல்வராஜ் :
பரியேறும் பெருமாள் என்ற சமூக அரசியலை வெளிப்படுத்தும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் மாரி செல்வராஜ். தற்போது இவரின் நான்காவது படைப்பான வாழை திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது.
அத்துடன் வாழ்வில் தான் அனுபவித்த, பார்த்த சம்பவங்களைத் திரைப்படங்களில் பதிவு செய்துவரும் இயக்குனர் மாரி செல்வராஜ், தற்போது இந்த வாழை திரைப்படத்தில் தான் உட்பட தன்னுடைய கிராமமே அனுபவித்த துயரத்தையும் வர்க்க கொடுமையைப் பதிவு செய்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து :
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் வாழை திரைப்படத்தைப் பார்த்து மாரி செல்வராஜுக்கும் திரைப்பட குழுவினருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
வாழை திரைப்படம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள் என்றும்,
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி.
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி அடைந்தேன்.
டிரைவர் இல்லாமல் ஜாகுவார் காரில் பயணித்த முதல்வர் – இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!
காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்” என்று மாரி செல்வராஜை பாராட்டி பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
உச்ச நீதிமன்றம் புதிய கொடியை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி
யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்கையை தோனி கெடுத்து விட்டார்
தவெக கட்சியின் முதல் மாநாடு ஜனவரிக்கு மாற்றம்?