பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் இவர் தான்? விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் இவர் தான்? விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் இவர் தான்: விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்களை கவர எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் கூட, ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். கிட்டத்தட்ட 7 சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது 8 வது சீசன் ஆரம்பிக்க கூடிய பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் ஷோவில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த ஷோ இம்மாதம் அல்லது அடுத்த மாதம் தொடங்க இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் வைல்ட் கார்டு  மூலம் என்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டிலை தட்டி சென்றார்.

பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் இவர் தான்

மேலும் இந்த ஷோவில் இருந்து உலக நாயகன் கமல்ஹாசன் விலக இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். அவரை தொடர்ந்து யார் ஷோவை தொகுத்து வழங்க போகிறார்? என்று மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Also Read: பிக்பாஸ் 8ல் பங்கேற்கும் டைட்டில் வின்னர் லவ்வர் – வெளியே கசிந்த போட்டியாளர்களின் விவரம்!!

இறுதியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் ஹோஸ்ட் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 ன் தொகுப்பாளர் குறித்து விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது விஜய் டிவியின் நம்பர் 1 ஷோவான பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ வீடியோவை தான் விஜய் டிவி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *