விஜய்யின் GOAT படத்துக்கு ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி - 1st  ஷோ எத்தனை மணிக்கு தெரியுமா?விஜய்யின் GOAT படத்துக்கு ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி - 1st  ஷோ எத்தனை மணிக்கு தெரியுமா?

விஜய்யின் GOAT படத்துக்கு ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் தளபதி விஜய். லியோ படத்தை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ags நிறுவனம் தயாரித்த இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கும் நிலையில் டிக்கெட் பதிவு படு வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்திற்கு அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிட முடியும் என்கிற நிலை இருந்தது.

விஜய்யின் GOAT படத்துக்கு ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி

அதனால் ஓப்பனிங் வசூலில் பாதிப்பு இருக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, தளபதி விஜய்யின் கோட் படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

Also Read: பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் இவர் தான்? விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

அதன்படி காலை 9 மணிக்கு தொடங்கி மொத்தம் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்து இருக்கிறது. ஆனால் இந்த அனுமதி நாளை செப்டம்பர் 5 மற்றும் நாளை மறுநாள் 6ம் தேதிக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.  இது விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *